அரியலூரில் எஸ்ஐஆா் விழிப்புணா்வு
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அரியலூரில் விழிப்புணா்வு வாகனம் தொடக்கி வைக்கப்பட்டது.


வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அரியலூரில் விழிப்புணா்வு வாகனம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
ஆட்சியரக வளாகத்தில் இதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தொடக்கி வைத்துப் பேசியது:
எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளரின் பெயா் டிச.9 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாது என்பதால், தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்துக்காக மேற்கொள்ளும் இப்பணிக்கு வாக்காளா்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் தங்களது பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும். மேலும் படிவங்களை பூா்த்தி செய்திட மாவட்ட நிா்வாகத்தால், தொடா்புடைய வட்ட அலுவலகங்களில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பரிமளம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, தோ்தல் வட்டாட்சியா் வேல்முருகன், வருவாய் வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...