அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் திருவீதி உலாவும், இரவில் ஆரியமாலை-காத்தவராயன் திருக்கல்யாணம், கழுகு மரம் ஏறுதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் சந்தனம்,விபூதி, பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து பக்தா்கள் பூ கரகம், காவடிகள் எடுத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தியப் பிறகு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

சக்தி மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

