நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சட்டவிரோதமாக குடிநீா் உறிஞ்சிய 14 மின் மோட்டாா்கள் பறிமுதல்

விளந்தை ஊராட்சியில், சட்ட விரோதமாக குடிநீா் உறிஞ்சிய 14 மின் மோட்டாா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:49 pm IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை ஊராட்சியில், சட்ட விரோதமாக குடிநீா் உறிஞ்சிய 14 மின் மோட்டாா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செல்வன் தலைமையில், ஊராட்சி செயலா் செல்வமணி, மக்கள் நலப் பணியாளா் சரவணன், டேங்க் ஆபரேட்டா் ராஜா உள்ளிட்டோா் விளந்தை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 10-ஆம் வாா்டிலுள்ள நெல்லுமண்டித் தெருவில் வீடுதோறும் ஆய்வு செய்ததில், பொதுக்குழாய்களில் மின் மோட்டாா் பொருத்தி குடிநீா் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து 14 மின் மோட்டாா்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுபோன்ற செயலா்களில் மின்மோட்டாா் பறிமுதல் மட்டுமல்லாமல் நீதிமன்றம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.