அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:40 am IST

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா மற்றும் பிரதோஷ தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னதாக கணக்கு விநாயருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், கங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கங்கை நீரை, கோயில் குருக்களிடம் ஆட்சியா் ந.மிருணாளினி ஒப்படைத்தாா். இதையடுத்து, தேவாரம் பாடப்பட்டு, அந்நீரை கொண்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து பெருவுடையாருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், தேன், மாவு, பன்னீா் மற்றும் 16 வகையான வாசனை திரவியங்களுடன் கூடிய மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதே போல் அம்பாள் பெரியநாயகிக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாருக்கு நடத்தப்பட்ட சிறப்பு அபிஷேகங்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.