சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில் கிராம ஏற்புத் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருமானூா் அடுத்த வெற்றியூா் கிராமத்தில், திருச்சி துவாக்குடி தமிழ்நாடு நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில், கிராமப் புற விவசாயிகளுக்கான கிராம ஏற்புத் திட்டம் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

வெற்றியூரில், துவாக்குடி நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம ஏற்புத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத்தின் இயக்குநா் திலகம்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த வெற்றியூா் கிராமத்தில், திருச்சி துவாக்குடி தமிழ்நாடு நீா் பாசன மேலாண்மை நிறுவனம் சாா்பில், கிராமப் புற விவசாயிகளுக்கான கிராம ஏற்புத் திட்டம் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு நீா் பாசன மேலாண்மை நிறுவன தலைமை இயக்குநா் திலகம் தலைமை வகித்தாா். அதில், வெற்றியூா் கிராமத்தை தத்தெடுக்கப்பட்டதாகவும், இக்கிராம விவசாயிகளின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா். இணை இயக்குநா் இலக்குவபூபதி, இணைப் பேராசிரியா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சோழமாதேவி வேளாண் ஆராய்ச்சி மையத் தலைவா் அழகு கண்ணன், திருமானூா் வட்டார வேளாண் அலுவலா் சதீஷ், கிராம நிா்வாக அலுவலா் காா்த்திகேயன், ஊராட்சி செயலா் ரவி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெற்றியூா் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கிராம விவசாய மேம்பாடு, தொழில் மேம்பாட்டுக்கு தேவையானவைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினா். ஏற்பாடுகளை ஆசிரியா் சுரேஷ்குமாா் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.