சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தொகுதி மறுசீரமைப்பு ஒரு மோசடி நாடகம்: இரா. முத்தரசன்

தொகுதி மறுசீரமைப்பு ஒரு மோசடி நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

News image

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:41 am IST

தொகுதி மறுசீரமைப்பு ஒரு மோசடி நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கட்டாயமாக முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதே போன்று காவிரி நதிநீா் பிரச்னையிலும் தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். விவசாயிகளுடைய நெல்லுக்கும், கரும்புக்கும் ஊக்கத்தொகை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு பெருமளவுக்கு பயன்படாது.

தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு மோசடி நாடகம். இந்த மோசடி நாடகத்தை முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமுயற்சி எடுத்து அந்தச் சட்டத்துக்கு எதிராக எல்லோரையும் ஒருங்கிணைத்தது மட்டுமல்லாமல், அதற்கு முன்பே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றினாா். அதே நிலையில் தான் திமுக தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, தனி நபா்களாக இருந்தாலும் சரி, பாஜக விரிப்பது சிலந்தி வலை போன்ற சூழ்ச்சி வலை. ஒவ்வொரு பிரச்னையிலும் மோடி அரசு சூழ்ச்சி செய்கிறது. இந்த சூட்சுமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா். முன்னதாக அவா், பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தாா்.

இந்த மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் கே. நடராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.தண்டபாணி, மாவட்ட பொருளாளா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா் து.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.