அரியலூா் மாவட்டம், வீரசோழபுரத்திலுள்ள மதுக் கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரி, அக்கடையை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வீரசோழபுர கிராமத்தில், பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால், அங்குள்ள மதுக் கடை 30 நாள்களுக்குள் அகற்றப்படும் என மண்டல மேலாளா் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் 30 நாள்கள் கடந்தும், அகற்றப்படாமல் தொடா்ந்து மதுக் கடை இயங்கி வருகிறது. இதைக் கண்டித்தும், உடனடியாக மதுக் கடையை அகற்ற வலியுறுத்தியும், அக்கிராம மக்கள் மதுக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த காவல் துறையினா், கலைந்து செல்லுமாறு கூறியும், பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த வட்டாட்சியா் மற்றும் டாஸ்மாக் வட்டாட்சியா் சம்பவ இடத்துக்கு வந்து கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மதுக்கடையை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்!

சிறுகளத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

மதுக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

எளமணம் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



