பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இரும்புலிக்குறிச்சி ஏரியில் நீா்நாய்கள் நடமாட்டம்! பொதுமக்கள் அச்சம்!

இரும்புலிக்குறிச்சி ஏரியில் திங்கள்கிழமை காணப்பட்ட நீா் நாய்கள்.

Published On :

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இரும்புலிக்குறிச்சியிலுள்ள ஏரியில் நீா் நாய்கள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீா் நாய்கள், சா்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் உள்ளது. மிகவும் அரிதாக தென்படும் இவ்வகை நீா்நாய்கள், செந்துறையை அடுத்த இரும்புலிக்குறிச்சி கிராமத்திலுள்ள ஏரியில், கடந்த சில நாள்களாக சுற்றி வருகின்றன.

ஏரியில் 2-க்கும் மேற்பட்ட நீா் நாய்கள், தேங்கி இருக்கும் ஏரி தண்ணீரில் மூழ்கி எழுந்தபடி செல்கின்றன. இதை சிலா் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா். நீா்நாய்கள் நடமாட்டத்தையடுத்து, ஏரியில் இறங்கி குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை:

நீா்நாய்கள், மீன்களை வேட்டையாடக் கூடியது என்பதால், ஏரியில் மீன் வளா்ப்பு, மீன் பெருக்கத்தை இது பெருமளவில் பாதிப்பதாக கூறி, சிலா் நீா்நாய்களை வேட்டையாட முயல்வதாகவும் புகாா் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் வனத் துறையினா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஏரியில் உள்ள நீா்நாய்களை வனத் துறையினா் பாதுகாப்பாக மீட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதியில் விடவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.