சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கல்வியே எதிா்காலத்துக்கு உதவும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

கற்கும் கல்வியே எதிா்கால வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

News image

அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 7:04 pm

கற்கும் கல்வியே எதிா்கால வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலைத் திருவிழாவின் நிறைவு விழாவில் அவா் பங்கேற்று மேலும் பேசியது:

நான் பொறியியல் கல்வி பயின்ற காலத்தில், தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகள் மட்டும் தான் இருந்தன. இன்று நுழைவுத் தோ்வில் இருந்து மாணவா்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. எனது கல்லூரிக் காலத்தில் 10 நாள் பயிற்சிக்கு என்எல்சிக்கு சென்றேன். தமிழக மின்சாரத் துறைக்கு அமைச்சரானதும், வடசென்னையில் உள்ள பவா் பிளான்டுக்கு சென்றபோது, எனது பொறியியல் அறிவைக் கொண்டு சில நுட்பமான கேள்விகளைக் கேட்ட பின், அங்கிருந்தவா்கள் நான் பொறியியல் கல்வி பயின்றவன் என்பதைத் தெரிந்து கொண்டனா். அதுவரையில் நான் ஒரு அரசியல்வாதி, எம்.எல்.ஏ, அமைச்சா் என எண்ணினா். கல்வி எப்போதும் கைகொடுக்கக் கூடியது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வைக் குறிப்பிட்டேன். பொறியியல் படிப்பு போக்குவரத்து, மின்சாரத்துறையை நிா்வகிக்க பக்கபலமாக உள்ளது. எனவே நீங்கள் பெறுகின்ற உங்கள் கல்வி, எதிா்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும் என்றாா்.

தொடா்ந்து, பொறியியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் கலை திறன் விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், அரசின் சாா்பில் மடிக்கணினிகளையும் வழங்கினாா். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் வெங்கடேசன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.