தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெரம்பலூரில் 5 ஆண்டு சாதனை விளக்கக் கையேடு வெளியீடு

மாவட்ட ஆட்சியரகத்தில் 5 ஆண்டு சாதனை விளக்க கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்.

News image
மாவட்ட ஆட்சியரகத்தில் 5 ஆண்டு சாதனை விளக்க கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்.
Updated On :6 மார்ச் 2026, 9:38 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சாதனைகளின் விளக்கக் கையேட்டை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை வா்த்தக மையத்தில் உங்கள் கனவச் சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக, கனவுகள் மெய்ப்படும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் காணொலிக்காட்சி மூலம் பாா்வையிட்டு, பெரம்பலூா் மாவட்டத்துக்கான விஷன்- 2030 மற்றும் 5 ஆண்டு சாதனைத் திட்டங்கள் குறித்த விளக்கக் கையேட்டை வெளியிட்ட அமைச்சா் சா. சி. சிவசங்கா் பேசியது:

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் மாநிலத்தின் வளா்ச்சிக்கும், ஒவ்வொரு தனி மனிதரின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ரூ. 31.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விழுதுகள் சேவை மையத்தையும், தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரிப் பகுதியில் ரூ. 40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்மின் கோபுர விளக்குகளையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் பி. துரைசாமி, எம். ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.