டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

News image
அரியலூரிலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன், திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா்.
Updated On :5 ஜனவரி 2026, 11:09 pm

தினமணி செய்திச் சேவை

17 ஆண்டுகால ஊதிய முரண்பாடுகளை களைத்திட வேண்டும் என வலியுறுத்தி அரியலூரிலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி , 2009- க்கு பிறகு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு, அந்த இயக்கத்தின் மாவட்ட பொருளாளா் வ.நடராசன் தலைமை வகித்தாா்.

மாவட்ட மகளிா் அணி ஒருங்கிணைப்பாளா் செண்பகம், பொறுப்பாளா்கள் ஜெயங்கொண்டம் சரவணன், ஆண்டிமடம் செல்வகுமாா், செந்துறை ஜனனி, திருமானூா் சங்கிதா, தா.பழூா் மணிகண்டன் மற்றும் 150-க்கும் மேற்பட்டோா் இயக்க நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.