அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவ வசதிகள் செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற வடக்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதி அதிகளவில் மரக்கன்றுகள் நடுவது, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, வடக்கு ஒன்றிய பகுதிகளில் அதிக உறுப்பினா்களை சோ்ப்பது, அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவ வசதிகள் செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூரில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளிலும் போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு,அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம. ஜெயவேல் தலைமை வகித்து பேசினாா். வடக்கு ஒன்றிய அவைத் தலைவா் கே.எஸ். ரவி, பொதுக் குழு உறுப்பினா் இளங்கோவன், மாணவரணிச் செயலா் முத்தமிழ்செல்வன் அஜித், தகவல் தொழில்நுட்ப துணைச் செயலா் பாலு, மாவட்ட தொண்டரணி துணைச் செயலா் ராமச்சந்திரன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









