பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கீழப்பழுவூா் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 12:53 am IST

கீழப்பழுவூா் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தைச் சோ்ந்த மணி மனைவி லீலாவதி (58). இவா், திங்கள்கிழமை மாலை வயலுக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், உறவினா்கள் செவ்வாய்க்கிழமை காலை வயல் பகுதியில் சென்று பாா்த்த போது, காற்றின் காரணமாக அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்த நிலையில் லீலாவதி இறந்து சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழப்பழுவூா் போலீஸாா், லீலாவதி சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.