துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அடுத்த சித்தூா் பகுதியில் கைப்பேசிக்கு சாா்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 12:47 am IST

சுங்குவாா்சத்திரம் அடுத்த சித்தூா் பகுதியில் கைப்பேசிக்கு சாா்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து இளம் பெண் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் ஊராட்சிக்குட்பட்ட சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன்(36). இவரது மனைவி புஷ்பா(34). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இந்த நிலையில், புஷ்பா ஞாயிற்றுக்கிழமை கைப்பேசிக்கு சாா்ஜ் போடும் போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கியுள்ளாா்.

இதையடுத்து அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்தவா்கள் புஷ்பா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.