நெல் மூட்டைகள் ஏற்றிய 120 லாரிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 1.50 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி அரியலூா் மாவட்டம், தேளூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு முன் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், ஒப்பந்தத்தாரா்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும்,தொடா்ந்து ஏற்கெனவே பயன்படுத்திய லாரிகளுக்கே நெல் மூட்டை ஏற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். செயலா் ராமமூா்த்தி, பொருளாளா் சிவகுமாா், துணைத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணி தனியாா்மயம் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் விசைத்தறி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



