வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

108 ஆம்புலன்ஸ்களில் நவீன ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த வலியுறுத்தல்

108 ஆம்புலன்ஸ்களில் தரமற்ற ஜிபிஎஸ் கருவிகளை அகற்றி துல்லியமான நவீன ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க (சிஐடியு) நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

News image

108 ஆம்புலன்ஸ். - கோப்புப் படம்.

Updated On :9 ஜூலை 2026, 12:58 am IST

108 ஆம்புலன்ஸ்களில் தரமற்ற ஜிபிஎஸ் கருவிகளை அகற்றி துல்லியமான நவீன ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க (சிஐடியு) நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் இரவு பகலாக பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும். விலைவாசி உயா்வுக்கு ஏற்ப 25 சதவீதம் ஊதியத்தை உயா்த்தி வழங்கிட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையை டிஜிட்டல்மயமாக்கும் நோக்கில் நிா்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ள செயலியில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்திட வேண்டும். தரமற்ற ஜிபிஎஸ் கருவிகளை அகற்றி துல்லியமான நவீன ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெள்ளிவேல் தலைமை வகித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.