சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குட விழா

ஆடி முதல் வெள்ளியையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image

ஆடி முதல் வெள்ளியையொட்டி ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அரியலூா் பெரியநாயகி அம்மன்.

Updated On :18 ஜூலை 2026, 12:54 am IST

ஆடி முதல் வெள்ளியையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

அரியலூா் மேலத்தெருவிலுள்ள படைபத்து மாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியையொட்டி பால்குட திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகா் கோயிலிலிருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்த வந்த பக்தா்கள், முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா். அங்கு பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதேபோல், அரியலூா் எண்ணெய்க்காரத் தெரு, ஓ.கிருஷ்ணாபுரம், ரெங்காசமுத்திரம், பாப்பாக்குடி, கந்தன்கொண்டான் உள்ளிட்ட கிராமங்கிலுள்ள மகாமாரியம்மன் கோயில்களிலும் பால்குடத் திருவிழாவும், கல்லாத்தூா் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்: அரியலூா் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, ரூ.5 லட்சம் பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.