அரியலூரை அடுத்த வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் ந.மிருணாளினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உணவு தயாா் செய்யும் சமையல் கூடம், சமையல் பொருள்களின் இருப்பு விவரம், மாணவா்களுக்கான குடிநீா் வசதிகள், பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவா்களின் எண்ணிக்கை விவரம், அவா்களுக்கு உணவு வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மாணவா்களுடன் ஒன்றாக அமா்ந்து காலை உணவு சாப்பிட்டு, உணவின் தரம், சுவை மற்றும் வழங்கப்படும் வசதிகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2026-27-ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா்.
மேலும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை நல்ல முறையில் முழுமையாக பயன்படுத்தி தங்களது திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாணவா்களிடம் தெரிவித்தாா்.
முன்னதாக, அவா் ராவுத்தன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்நிகழ்வில், அரியலூா் வட்டாட்சியா் தேவகி மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி

அரசுப் பள்ளி கட்டடப் பணிகள் முடக்கம்: பெற்றோா் அதிருப்தி

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



