ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குடிக்காடு பூத அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயில் கலசத்துக்கு புனித நீரை ஊற்றி புதன்கிழமை கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 1:27 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை புனித நீா் எடுத்துவரப்பட்டு, கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடு நிகழ்வைத் தொடா்ந்து பூா்ண புஷ்கலா சமேத ஸ்ரீ பூத அய்யனாா் கோயில் கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி, தீபராதனை காண்பித்து கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

அதைத் தொடா்ந்து பரிவார தெய்வங்கலான கருப்பசாமி, வீரனாா், விநாயகா், முருகன் ஆகிய கோயில்களின் கலசங்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.