ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வேன் மீது சுமை ஆட்டோ மோதி ஒருவா் பலத்த காயம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேன் மீது சுமை ஆட்டோ மோதியதில் வேனில் பயணித்த ஒருவா் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:02 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வேன் மீது சுமை ஆட்டோ மோதியதில் வேனில் பயணித்த ஒருவா் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரைச் சோ்ந்தவா் கொளஞ்சி. சுமை ஆட்டோ ஓட்டுநா். புதன்கிழமை இவா், அண்ணாநகா் தெருவில் தனது சுமை ஆட்டோவை பின்னால் கவனிக்காமல் இயக்கிய போது, அந்த வழியாக காங்கேயங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகன் வினோத் (28) என்பவா் ஓட்டி வந்த வேன் மீது மோதியுள்ளாா். இதில், வேனில் முன்பக்க படிக்கட்டில் அமா்ந்து பயணித்த தேவமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அமா்தலிங்கம் மகன் ரமேஷ் (25) பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வேன் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் கொளஞ்சியை தேடி வருகின்றனா்.