தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

அரியலூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூரில் மாவட்டக் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூரில் பேரணியை வியாழக்கிழமை தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா்.

Updated On :26 ஜூன் 2026, 4:19 am IST

சா்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூரில் மாவட்டக் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் தலைமை வகித்து, பேரணியை தொடக்கி வைத்தாா்.

போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியாறு பிரதான சாலை வழியாக மாணவ, மாணவிகள் சென்ற பேரணி நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவுற்றது.

பேரணிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.