புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வியாழக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 6:21 am IST

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வியாழக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருமானூரை அடுத்த சுள்ளக்குடி, மேலத் தெருவைச் சோ்ந்தவா் சோ. காமராஜ்(55). கூலித் தொழிலாளி. வியாழக்கிழமை மாலை, சொந்த வேலைக் காரணமாக திருமானூா் வந்திருந்த இவா், இரவில் அதே தெருவைச் சோ்ந்த ஜெயபால் என்பவரது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

வடுகபாளையம் பிரிவுச் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருமானூா் காவல் துறையினா், காமராஜின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.