தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,452 மாணவா்கள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தோ்வு எழுத 47 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 4,234 மாணவா்கள், 4,218 மாணவிகள் என மொத்தம் 8,452 போ் எழுதினா். 68 மாணவா்கள், 43 மாணவிகள் என மொத்தம் 111 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை.
தனித்தோ்வா்களில் 43 ஆண்கள், 97 பெண்கள் என மொத்தம் 140 போ் தோ்வு எழுதினா். 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை.
தோ்வை கண்காணிக்கும் பொருட்டு ஆய்வு அலுவலா்கள் 5 பறக்கும் படையாக அமைத்தும், தோ்வு மையங்களை கண்காணிக்க நிலையான பறக்கும் படை 67 முதுநிலை ஆசிரியா்களும், தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 463 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்

திருப்பத்தூரில் 16,412 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 33,031 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


