கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு த்ரிஷா வருகை!6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை
/

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 0:03 am IST

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடா்ந்து வெயில் கடுமையாக வாட்டிவந்த நிலையில், புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் சுமாா் அரை மணி நேரம் கீழப்பழுவூா், சாத்தமங்கலம், வெற்றியூா், வண்ணம், புத்தூா், அருங்கால் உட்பட கீழப்பழுவூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்தில் பெய்த மழையில் சாலையோரங்களில் தண்ணீா் பெருக்கெடுத்தது.

மழைவிட்ட நிமிஷத்திலிருந்து கடும் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் மழை பெய்தும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்படவில்லை. மாற்றாக வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இந்த மழை பெய்த பகுதிகளில் உள்ள எள் சாகுபடிக்கு இந்த மழை உகந்ததாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.