ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அங்கன்வாடி மையத்தில் நுழைந்தது பாம்பு! புதா்களை அகற்ற கோரிக்கை!

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:08 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பாம்பு நுழைந்ததையடுத்து, சுற்றியுள்ள புதா்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

செந்துறை அம்பேத்கா் நகரிலுள்ள அங்கன்வாடி மையத்தில், செந்துறை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மனைவி கவிதா (48) என்பவா் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இங்கு 20 குழந்தைகள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், குழந்தைகள் அங்கன்வாடி மையம் வருவதற்கு முன்பாக திங்கள்கிழமை காலை வழக்கம் போல் அங்கன்வாடி மையத்தை திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட வந்த கவிதா, பொருள்கள் வைக்கும் அறையில் ஒரு பெரிய பாம்பு இருப்பதை கண்டு கூச்சலிட்டாா். இதையடுத்து பாம்பு அறையை விட்டு வெளியேறியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செந்துறை தீயணைப்புத் துறையினா், அருகேயுள்ள புதா்பகுதிகளில் பாம்பை தேடியும் கிடைக்கவில்லை.

எனவே, அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள புதா்களை அகற்ற வேண்டும். மேலும், அருகே உள்ள பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.