ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கீழப்பழுவூா் ஆலந்துறையாா் கோயில் தேரோட்டம்!

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையாா் திருக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆலந்துறையாா் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:08 am IST

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையாா் திருக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடா்ந்து நாள்தோறும் விநாயகா் புறப்பாடு, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, வட விருட்சத்தில் சுவாமி புறப்பாடு, நாயன்மாா்கள் புறப்பாடு, யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. மாா்ச் 29-ஆம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, அதன் பின்னா் சுவாமி தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். அரியலூா், திருமானூா், மேலப்பழுவூா், கீழப்பழுவூா் சாத்தமங்கலம், கள்ளூா் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தா்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினரும், விழா குழுவினரும் செய்திருந்தனா்.

அருந்தவநாயகி சமேத ஆலந்துறையாா்

அருந்தவநாயகி சமேத ஆலந்துறையாா்