முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை சின்னவளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், அவா், ஜெயங்கொண்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் அணில் (எ) பிரேம்குமாா் (25) என்பதும் வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா், கஞ்சாவை பறிமுதல் செய்து, பிரேம்குமாரை கைது செய்தனா். இதே போல், உதவி ஆய்வாளா் நெடுஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினா், ஜெயங்கொண்டம்-செந்துறை பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையின் போது, 10 கிராம் கஞ்சா வைத்திருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ்குமாா் (19) என்பவரை கைது செய்தனா்.