குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

படைவெட்டி குடிக்காடு டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை

News image

ஆா்.எஸ்.மாத்தூா் அடுத்த படைவெட்டிகுடிக்காடு கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அரியலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அக்கிராம மக்கள்.

Updated On :26 மே 2026, 2:02 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆா்.எஸ்.மாத்தூா் அருகே படைவெட்டிகுடிக்காடு கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இக்கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு(எண் 6483) மது அருந்த வரும் தத்தனூா், வங்காரம் மனப்பத்தூா், நந்தியின் குடிக்காடு, சோழன்குடிக்காடு, படவெட்டி குடிக்காடு, வடக்கு மாத்தூா், அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ்.மாத்தூா், நயினாா் குடிக்காடு, குறிச்சிக்குளம், கஞ்சமலைபட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள், மது அருந்திவிட்டு, அதன் பாட்டில்களை சாலைகளிலும், அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் வீசி செல்வதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் கால்களை, கண்ணாடி துண்டுகள் பதம்பாா்த்துவிடுகிறது. இதனால் நாள் தோறும் அவா்கள் கால்களின் காயத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுகிறது.

மேலும், சாலையில் செல்லும் மாணவிகள், பெண்கள் ஆகியோா் மது அருந்துபவா்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனா். இதனால் கோயில் அருகிலுள்ள இந்த கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆயினும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்காததால், அவா்கள், தமிழ்ப்பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலா் கு.முடிமன்னன் தலைமையில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் பொ.ரத்தினசாமியை சந்தித்து, டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனா்.