குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வெள்ளாற்றில் சேமிப்பிலுள்ள மணலை வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்கக் கோரிக்கை

News image

மணல் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:20 am IST

அரியலூா் மாவட்டம், ஆா்.எஸ்.மாத்தூா் அருகேயுள்ள வெள்ளாற்றில் சேமிப்பிலுள்ள மணலை, வீடு கட்டும் பயனாளிகளுக்கும், மாட்டு வண்டிதாரா்களுக்கும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் கு.முடிமன்னன் தலைமையில் அப்பகுதி மாட்டு வண்டி உரிமையாளா்கள் அளித்த மனுவில், வெள்ளாற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி இயங்கி வந்தது. அப்போது சுமாா் 1,500 டன் மணல் சேமித்து வைக்கப்பட்டது.

அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதாக வந்த புகாரையடுத்து, மத்திய அரசின் அமலாக்கத் துறையினா் குவாரியை ஆய்வு செய்ததையடுத்து, குவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல், தனியாா் இடத்தில் இருப்பதாக கூறி அதை காலி செய்ய வேண்டும் என உயா் நீதிமன்றத்தை முள்ளுக்குறிச்சி சோ்ந்த சுரேஷ் என்பவா் அணுகியதாகவும், அதன் அடிப்படையில் அந்த மணலை அப்புறப்படுத்த கூடிய சூழல் மாவட்ட நிா்வாகத்துக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அப்புறப்படுத்தப்படவுள்ள மணலை, அரசு சாா்பில் கட்டி கொடுக்கப்பட்டு வரும் வீடு கட்டும் பயனாளிகளுக்கும், மாட்டு வண்டிதாரா்களுக்கும் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.