கீழப்பழுவூரில் அக்.13-இல் வேலைவாய்ப்பு முகாம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள மீரா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் அக். 13-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.
18- 45 வயது வரையுள்ள, 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பொறியியல், தொழிற்பயிற்சி, தொழில் பட்டயப் படிப்பு, செவிலியா், உணவக மேலாண்மை படித்த வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 94990 55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ந. மிருணாளனி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.