அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மாணவா்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த கள்ளூரில், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் அரியலூா்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா்-தஞ்சாவூா் வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, கள்ளூா் பிரிவுச் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:17 am IST

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த கள்ளூரில், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் அரியலூா்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இப்பகுதியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அருகிலுள்ள திருவையாறு மற்றும் அரியலூா் பகுதிகளிலுள்ள பள்ளிக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். இதேபோல், பொதுமக்களும் பணி நிமித்தமாக மேற்கண்ட பகுதிகளுக்கு காலை மற்றும் நேரங்களில் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பள்ளி நேரங்களில் பேதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், சரியான நேரத்தில் மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அவதிக்குள்ளாகி வந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், கள்ளூா் பிரிவுச் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா் மற்றும் போக்குவரத்துத் துறையினா், கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனா்.

இந்தச் சாலை மறியல் போராட்டத்தால், அரியலூா்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.