
பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா்களை நியமிக்கக் கோரி பெற்றோா்களுடன் மாணவா்கள் சாலை மறியல்
விராலிமலை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா்களை நியமிக்கக் கோரி பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விராலிமலை -இனாம்குளத்தூா் சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா்.
விராலிமலை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா்களை நியமிக்கக் கோரி பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விராலிமலை அடுத்துள்ள கல்குடி ஊராட்சிக்குள்பட்ட கடப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமாா் 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் இப்பள்ளிக்கு 5 ஆசிரியா்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் இரண்டு ஆசிரியா்கள் மட்டுமே இருப்பதால் மாணவா்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக தொடரும் இந்த நிலையை போக்கி, பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் புதன்கிழமை விராலிமலை -இனாம்குளத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வந்த கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா்களை நியமிப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





