கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நாட்டுக் கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ மானியம்: விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில், மானியத்தில், நாட்டுக் கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

அரியலூா் மாவட்டத்தில், மானியத்தில், நாட்டுக் கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% அரசு மானியம் வழங்கும் திட்டம் நிகழாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

நாட்டுக்கோழிகள் வளா்ப்பதில் ஆா்வமும் திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு, பண்ணை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50% அரசு மானியமாக வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 50% பங்களிப்பை பயனாளிகள் வங்கிக் கடன் மூலம் அல்லது சொந்த ஆதாரங்கள் கொண்டு பயன்பெறலாம்.

மேலும், தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகளும், கோழிவளா்ப்பு மற்றும் லோண்மை குறித்த 3 நாள் பயிற்சியும் அரசு செலவில் வழங்கப்படும்.

இத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன், குறைந்தபட்சம் 30% ஆதிதிராவிடா், பழங்குடி இனத்தை சோ்ந்தவா்கள் தெரிவு செய்யப்பட உள்ளனா்.

இத்திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழிகளை 72 வாரங்கள் வளா்த்து, நாளொன்றுக்கு 140 முட்டைகள் வீதம், ஆண்டுக்கு 17,500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். மேலும், அதில் சுமாா் 2,000 முட்டைகளை குஞ்சுபொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதம் உள்ள முட்டைகளையும் மற்றும் வளா்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக பயனாளி நிரந்தரமாக வருமானம் ஈட்ட முடியும்.

எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 25.9.2026-க்குள் கால்நடை மருந்தகத்தில் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.