இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச போனஸôக ரூ. 3,500 வழங்கக் கோரி,

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:33 am

தினமணி

அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச போனஸôக ரூ. 3,500 வழங்கக் கோரி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை
 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க முடிவின்படி
 நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் வி. பிச்சைக்காரன் தலைமை வகித்தார். சி. இளங்கோவன் வரவேற்றார், ஒன்றியச் செயலர் ஆர். ராஜேந்திரன் பேசினார். மாவட்ட துணைச் செயலர் ஆர். செல்வராஜ் வாழ்த்திப் பேசினார். பி. ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.
 கரூரில்...
 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வி.பி. கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பி. நல்லமுத்து வரவேற்றார்.
 மாவட்ட நிர்வாகிகள் பி. பாலகிருஷ்ணன், டி. அங்கமுத்து ஆகியோர் கடைநிலை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, சத்துணவு ஊழியர்களுக்கும் ஒரு மாத ஊதியம் ரூ. 3 ஆயிரம் போனஸôக வழங்க வலியுறுத்திப் பேசினர்.
 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் டி. மாதவன், கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலச் செயலர் பொன். ஜெயராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.