கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 138 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவது குறித்த விளக்கக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் தலைமை வகித்துப் பேசியது:
பசுமை வீடு திட்டத்திற்கு கடந்தாண்டு ரூ. 1.8 லட்சம் வழங்கப்பட்டது. இது தற்போது உயர்த்தப்பட்டு ரூ. 2.1 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் க. பரமத்தி ஒன்றியத்தில் 138 வீடுகள் கட்டப்பட உள்ளன. வீடு கட்டும் பணியை தொடங்கியோருக்கு வீடு கட்டத் தேவையான மணல் குறைந்த விலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் இருந்து வழங்கப்படுகிறது.
பயனாளிகள் அதற்கான ஒப்புகைச் சீட்டை ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு முடிந்தவரை முன் பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும். பூச்சு வேலைகளில் பூ அலங்கார வேலைகளைத் தவிர்ப்பது பணிகளை விரைந்து முடிக்க உதவும். பயனாளிகள் தவறாமல் கழிப்பறை மற்றும் மோல்டு கூரை மேல் தட்டு ஓடு பதிப்பது மிக அவசியம் என்றார். ஒன்றியப் பொறியாளர் சங்கர், ஊராட்சிகள் ஆணையர் வீரமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு வீடு கட்ட விளக்கக் கையேடும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
