ஆறு நாட்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரூரை வந்தடைந்தது அமராவதி நீர்.
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் கரூர் மாவட்டத்தின் கடைமடைப்பகுதிகள் பயன்பெறும் வகையில் கடந்த 19-ம் தேதி அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீர் 6 நாட்களுக்குப்பின் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கரூரை வந்தடைந்தது.
வரும் 30-ம் தேதி வரை விநாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீரால் கரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு மட்டுமன்றி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடிநீர் உறிஞ்சும் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

