வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பேராசிரியருக்கு பொருளியல் வல்லுநர் விருது

கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியருக்கு இளம் பொருளியல் வல்லுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:25 am

DIN

கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியருக்கு இளம் பொருளியல் வல்லுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் பொருளாதார வல்லுநர் மாநாடு அண்மையில் நடைபெற்றது.  இதில், கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதுகலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் துறையில் உதவிப்பேராசிரியராக பணியாற்றும் முனைவர் என்.முகுந்தனுக்கு தமிழ்நாடு பொருளியல் வல்லுநர் கூட்டமைப்பின் தலைவர்அருட்தந்தை ஏ.ஜி.லியோனோடு இளம்பொருளியல் வல்லுநர் விருது வழங்கி கௌரவித்தார்.
 சமூக, பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டது மற்றும் மாநில, தேசிய கருத்தரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தது ஆகியவற்றுக்காக பேராசிரியர் என்.முகுந்தனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.