கரூரில் அண்மையில் (அக். 9) நடைபெற்ற மாவட்ட சதுரங்கப் போட்டியில் கார்வழி தொடக்கப்பள்ளி மாணவர் மோகன்குமார் சிறப்பிடம் பிடித்தார்.
கரூர் ஆனந்த சதுரங்க அகாதெமி சார்பில் கடந்த 9 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. இதில், 6 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் அவரவர் வயது மற்றும் பிரிவுகளில் தனித்தனி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில், கார்வழி தொடக்கப்பள்ளி மாணவன் மோகன்குமார், அவர் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் புதன்கிழமை மாணவர் மோகன்குமாரை பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.