காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உழவர்சந்தை அருகே புதன்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் திலீபன் தலைமை வகித்தார். இயக்கத்தின் பாலாஜி, தி.க மாவட்டத் தலைவர் தனபால், சாமானிய மக்கள் கட்சியின் சண்முகம், தமிழுணர்வாளர்கள் கூட்டமைப்பின் தமிழ் ராஜேந்திரன், சமூகக் கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பின் மா. ராமசாமி, மக்கள் ஜனநாயகப் பேரவையின் சௌந்தராஜன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ராஜதுரை நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








