டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

காவிரி: ரயில் மறியலுக்கு முயன்ற  இந்திய கம்யூ.கட்சியினர் 35 பேர் கைது

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கரூரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய

Updated On :5 ஏப்ரல் 2018, 9:20 am IST

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கரூரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 35 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். 
கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்திற்கு தயாராகினர். முன்னாள் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் நா.பெரியசாமி தலைமையில் அக்கட்சியினர் காலை 11 மணியளவில் கரூர் ரயில்நிலையம் நுழைவுவாயில் முன் குவிந்தனர்.  தொடர்ந்து அவர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டவாறு ரயில்நிலையம் நோக்கி விரைந்து எர்ணாகுளம் -  நாகர்கோவில் ரயிலை மறிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸார், கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுவின் எம்.ஷேஷன், பி. பாலன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் புஷ்பா உள்ளிட்ட 35 பேரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.