கரூர் நகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று மேலும் கூறியது:
குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சி பகுதியில் நிர்வாக ஒப்புதல் ரூ.2467 லட்சத்திற்கும், தொழில்நுட்ப ஒப்புதல் ரூ.2,384 லட்சத்திற்கும், இனாம் கரூர் பகுதியில் நிர்வாக ஒப்புதல் ரூ.1,857 லட்சத்திற்கும் மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல் ரூ.2,041 லட்சத்திற்கும், தாந்தோணி பகுதியில் நிர்வாக ஒப்புதல் ரூ.2,516 லட்சத்திற்கும், தொழில்நுட்ப ஒப்புதல் ரூ.2,538 லட்சத்திற்கும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 1,34,927 (கரூர் நகராட்சி), 1,02,000 (இனாம் கரூர்), மற்றும் 72,563 (தாந்தோணி) மக்கள் பயன்பெற உள்ளனர். இப்பகுதி வாழ் மக்களுக்கு தினசரி தினசரி 135 லிட்டர் குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இடைக்கால மற்றும் உச்சகட்ட தினசரி குடிநீரின் அளவு முறையே 6.04 மற்றம் 7.77 மில்லியன் லிட்டர் (கரூர் நகராட்சி), 5.367 மற்றும் 9.46 மில்லியன் லிட்டர் (இனாம் கரூர்), 8.87 மற்றும் 11.84 மில்லியன் லிட்டர் (தாந்தோணி) ஆகும்.
கரூர் நகராட்சியில் திட்டப் பணிகள் முடிவுற்று 1.2.2016 முதல் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாற்று குடிநீர் இணைப்புகள் மற்றும் பகிர்மான குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஜூன் 2018-ல் முடித்து முழுமையான மக்கள் பயனுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இனாம் கரூர் பகுதியில் 65 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை அக்டோபர் 2018 இல் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாந்தோணியில் இத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு 10.1.2017 முதல் சோதனை ஓட்டம் துவங்கி 15.2.2017 முதல் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர்கள் அசோக்செல்வராஜ், சுந்தராஜ், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன்,தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மொண்டி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், வை.நெடுஞ்செழியன், நகர்மன்ற முன்னாள் தலைவர் எம்.செல்வராஜ், விசிகே. ஜெயராஜ், கமலக்கண்ணன், மார்க்கண்டேயன், பசுவை சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறதா தவெக?

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

4ஆவது முறையாக தொடக்க வீரர்களில் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்..! 2012 சீசன் திரும்புகிறதா?

வெயிலால் வியாபாரம் குறைவு! டீக்கடை உரிமையாளர் செய்த Tech Update! | Summer
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

