மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:43 am

DIN

கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். 
கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா அங்குரார்ப்பணத்துடன் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. 21 ஆம் தேதியன்று கொடியேற்றம் நடைபெற்றது. அன்று தொடங்கி 25 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுவாமி ஹம்ஸ, சிம்ம, ஹனுமந்த, வெள்ளிக் கருட, சேஷ வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.  தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது. இதையடுத்து புஷ்பக விமானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் திரு வீதி உலா நடைபெற்றது. சனிக்கிழமை ஸ்ரீரெங்கநாத சுவாமியுடன் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆண்டாங்கோவிலில் எழுந்தருளினார்.  
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. தேரை ஆட்சியர் த.அன்பழகன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.  
திங்கள்கிழமை (ஏப். 30) அமராவதி நதியில் தீர்த்தவாரி, இரவு ரெங்கநாத சுவாமி கெஜலட்சுமி வாகனத்திலும், கல்யாண வெங்கடரமண சுவாமி சேஷ வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (மே 1) இரவு ஆளும் பல்லாக்கு, மே 2 இல் ஸ்ரீ ரெங்கநாதர் சுவாமியுடன் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கும் ஊஞ்சல் உற்ஸவம், மே 3 இல் ஸ்ரீ ரெங்கநாத சுவாமிக்கும், ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கும் புஷ்ப யாகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.உற்ஸவ நாட்களில் காலை 8 மணிக்கு பல்லாக்கும், இரவு 7.30 மணிக்கு வாகன திருவீதி உலா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.