மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கணவர் குத்திக் கொலை: மனைவி கைது

கரூர் வாங்கப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமு (34). கட்டடத்தொழிலாளி

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:43 am

DIN

கரூர் வாங்கப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமு (34). கட்டடத்தொழிலாளி. இவருக்கு மனைவி தனலட்சுமி(28), மகள்கள்  பூமிகாஷ் (6), ஹரிவர்ஷா (2) ஆகியோர் உள்ளனர். ராமுவும், தனலட்சுமியும் கடந்த 8 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களாம். 
மது போதைக்கு அடிமையான ராமு அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். ஞாயிற்றுக்கிழமை மாலை போதையில் வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராமு மனைவியை கீழே தள்ளி கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அருகில் கிடந்த கத்தரிக்கோலால் ராமுவின் நெஞ்சில் தனலட்சுமி குத்தியுள்ளார். இதில் மயங்கிய ராமுவை உடனே மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் தனலட்சுமி சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிந்து தனலட்சுமியைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.