கரூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.9.97 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் எம். ராதாகிருஷ்ண பாண்டியன், கரூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான நலவாரிய உறுப்பினர்கள் 389 பேருக்கு ரூ.9.97 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கரூர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் ராமராஜ், துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.