ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

கண்பார்வை குறைபாடு: பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பள்ளிகளில் பயிலும் கண்பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் புதன்கிழமை துவக்கி வைத்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

பள்ளிகளில் பயிலும் கண்பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் கண்பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு சிறப்பு கண்சிகிச்சை முகாம் நடத்தும் நோக்கில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தொடக்கி வைத்து ஆட்சியர் த.அன்பழகன் பேசியது: மாவட்டத்தில் அரசு,  உதவி பெறும் 67 பள்ளிகளில் பயிலும் 600 மாணவர்களில் பார்வை குறைபாடுள்ள 245 மாணவ, மாணவியர் சிறப்பு மருத்துவப் பரிசோதனையில் கலந்து கொண்டனர்.  அவர்கள் 3 பிரிவுகளாக பரிசோதிக்கப்பட்டனர். கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 15 நாள்களுக்குள் இலவசமாக கண் கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல, மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் கண் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களை வட்டார வாரியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை, உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.  இதன் மூலம் கண் பார்வை குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கல்வியில் முழு கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் காது கேளாத குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில் குறைகளைக் கண்டறிந்து காது கேட்கும் திறன் பரிசோதனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.