ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கரூர் மாவட்ட முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆடிக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த கிருத்திகையாகும். ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை, பாலமலை, வெண்ணைமலை ஆகிய மலைகளில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தனம், தீர்த்தம், மூர்த்தி சிறப்புகொண்டதும், அருணகிரிநாதர், ஒளவையார் ஆகியோரால் பாடப்பெற்ற ஸ்தலமாக விளங்கும் வெண்ணைமலை முருகன் கோயிலில் அதிகாலையிலே முருகப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வெங்கமேடு பகுதியினர் ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இருந்து பால்குடம், சந்தன குடம், இளநீர் காவடி, புஷ்பகாவடி, தீர்த்தக்காவடிகளை எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை முதல் பிற்பகல் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல கரூர் பசுபதீஸ்வரர் கோயில், ஐந்துரோடு கோடீஸ்வரர் கோயில்
உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

அசத்தும் நடிகர் சூரியின் மண்டாடி முன்வெளியீட்டு வணிகம்!

தமிழில் வாழ்த்து தெரிவித்த CJP-ன் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்! | Delhi
மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


