கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், கஜாபுயல் நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சம் விகேஏ நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 375 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மண்மங்கலம் வட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி கடந்த வாரம்அளித்த மனுவின் பேரில் முதியோர் உதவித் தொகைகைக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், கரூர் விகேஏ பாலிமர்ஸ் பிரை வேட் லிமிடெட் நிறுவனம் சார்பில், ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் ரூ. 3.25 லட்சம், தலைமை நிர்வாக அதிகாரி நடராஜன் சார்பில் ரூ. 1 லட்சம், விகேஏ நிறுவனம் சார்பில் ரூ.75,000 என ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியரிடம், விகேஏ நிறுவனத்தின் தலைவர் விகேஏ. சாமியப்பன்,நிர்வாக இயக்குநர் விகேஏ. கருப்பண்ணன், இயக்குநர்கள் ஆனந்த்,அரவிந்த் ஆகியோர் வழங்கினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், தனித்துணை ஆட்சியர் கே.மீனாட்சி, மாவட்ட அதி திராவிடர் நல அலுவலர் லீலாவதி, விகேஏ நிறுவனத்தின் மேலாளர்கள் நாகராஜன்,சங்கர் கார்த்திக்,நிர்வாக அதிகாரி நல்லழகன், மனிதவள மேலாளர் வின்சென்ட் பிரின்ஸ் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







