மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

மாரியம்மன்கோயில் திருவிழா: வடிசோறு பூஜை செய்து வழிபாடு

கரூர் மாவட்டம், சடையம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் திங்கள்கிழமை வடிசோறுபூஜை செய்து வழிபாடு செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:32 am IST

கரூர் மாவட்டம், சடையம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் திங்கள்கிழமை வடிசோறுபூஜை செய்து வழிபாடு செய்தனர்.
க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சி, பெரியநடுப்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோயில் உள்ளது.  இங்குள்ள அம்மனை முக்கிய ஊர்களுக்கு பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்று அங்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.அதன்படி, சடையம்பாளையம் விநாயகர் கோவிலில் கடந்த 9-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி, பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, பெரியநடுப்பாளையம் கோயிலுக்குச் சென்று மாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள், புன்னை வனநாதர் சுவாமி கோயில், வரதராஜ பெருமாள், வீரஆஞ்சநேயர், கைலாசபுரம் செல்வகணபதி ஆகிய கோயில்கள் வழியாக சடையம்பாளையம் கொண்டு வந்தனர். விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, பின்னர் பக்தர்களால் வைக்கப்பட்ட பொங்கலை ஒவ்வொரு பானையிலிருந்தும் எடுத்து, ஒன்று சேர்த்து படைத்து வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை நடத்தினர். பின்னர் திங்கள்கிழமை மாலை காவிரியாற்றிலிருந்துபுனித நீர் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை  காலை கிடாவெட்டு நிகழ்ச்சி, மாலை பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெறுகின்றன. மாலையில் மஞ்சள்நீர் விளையாட்டு மாரியம்மன் திருவீதிஉலாவும் நடைபெறும்.ஊர் கொத்துக்காரர் சண்முகம், கைலாசபுரம் முத்துசாமி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மாலதிமுருகேசன், செந்தமிழ் இளைஞர் மன்ற அணியினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.