கரூர் மாவட்டம், சடையம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் திங்கள்கிழமை வடிசோறுபூஜை செய்து வழிபாடு செய்தனர்.
க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சி, பெரியநடுப்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள அம்மனை முக்கிய ஊர்களுக்கு பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்று அங்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.அதன்படி, சடையம்பாளையம் விநாயகர் கோவிலில் கடந்த 9-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி, பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, பெரியநடுப்பாளையம் கோயிலுக்குச் சென்று மாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள், புன்னை வனநாதர் சுவாமி கோயில், வரதராஜ பெருமாள், வீரஆஞ்சநேயர், கைலாசபுரம் செல்வகணபதி ஆகிய கோயில்கள் வழியாக சடையம்பாளையம் கொண்டு வந்தனர். விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, பின்னர் பக்தர்களால் வைக்கப்பட்ட பொங்கலை ஒவ்வொரு பானையிலிருந்தும் எடுத்து, ஒன்று சேர்த்து படைத்து வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை நடத்தினர். பின்னர் திங்கள்கிழமை மாலை காவிரியாற்றிலிருந்துபுனித நீர் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை கிடாவெட்டு நிகழ்ச்சி, மாலை பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெறுகின்றன. மாலையில் மஞ்சள்நீர் விளையாட்டு மாரியம்மன் திருவீதிஉலாவும் நடைபெறும்.ஊர் கொத்துக்காரர் சண்முகம், கைலாசபுரம் முத்துசாமி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மாலதிமுருகேசன், செந்தமிழ் இளைஞர் மன்ற அணியினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!





