ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக கரூரில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் புதன்கிழமை கல்லூரி நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வினை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று(21-ம்தேதி)முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கல்லலூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை கல்லூரி நுழைவு வாயில் அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் ந.சண்முகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்கோவன், இணைச்செயலாளர் பி.ஜூடஸ்மேரி, பொருளாளர் சி.பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.